/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பருத்தி களை எடுப்பு பணிகள் தீவிரம்
/
பருத்தி களை எடுப்பு பணிகள் தீவிரம்
ADDED : அக் 31, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சுற்று கிராமங்களில் பருத்தியில் களை எடுப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம், கட்டங்குடி, ஆமணக்கு நத்தம், வெள்ளையாபுரம், மலைப்பட்டி, கல்லுபட்டி உட்படஉட்பட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பருத்தி விதைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பருத்தி செடியாக வந்துள்ளது.
தற்போது களை எடுக்கும் தருவாயில் விவசாயிகள் களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் ஒரு மழை பெய்தால் உரம் இடுதல் உட்பட பணிகள் செய்ய வசதியாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

