ADDED : பிப் 03, 2024 04:33 AM
அ நிறம் | அளவு
அருப்புக் கோட்டை, : அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோடு சந்திப்பில் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தவும் துணி பைகளை பயன்படுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஆர்.ஐ ., கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் குமார் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் பாலாஜி பைகளை வழங்கி துவக்கி வைத்தார். வியாபாரிகளும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறம் டிரஸ்ட் குழுவினர் செய்தனர்.
