/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வால் சலசலப்பு
/
விருதுநகர் நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வால் சலசலப்பு
விருதுநகர் நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வால் சலசலப்பு
விருதுநகர் நகராட்சி தலைவரை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வால் சலசலப்பு
ADDED : பிப் 13, 2025 06:33 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் அரசாணையின்றி சொத்து வரி உயர்த்தப்பட்டதால் நகராட்சி கூட்டத்தில் தலைவரை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர்.
விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. இதில் கமிஷனர் சுகந்தி, துணைத்தலைவர் தனலட்சுமி, பொறியாளர் எட்வின் பிரைட் ஜோஸ் முன்னிலையில் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஆறுமுகம் (தி.மு.க.): பெ.சி.சி., மகப்பேறு மருத்துவமனையை அகற்றப்போவதாக வரும் தகவல்கள் உண்மையா
தலைவர் மாதவன்: மருத்துவமனை தொடர்ந்து அதே இடத்தில் செயல்படும்.
ஜெயக்குமார் (மார்க்சிஸ்ட்): வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியாமல், அரசாணை இன்றி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், வரியை குறைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி இரு மாதங்களாகிறது. இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.
இதையடுத்து தி.மு.க., அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் சுயேச்சை உறுப்பினர்கள் நகராட்சி தலைவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு நேரடியாக சென்னைக்கு சென்று நகராட்சி நிர்வாக இயக்குனரை சந்தித்து நடவடிக்கை எடுப்பதாக தலைவர் உறுதி அளித்தார்.
வெங்டேஷ் (அ.தி.மு.க.): நகராட்சி வார்டுகளில் மோசமான ரோடு உள்ள இடங்களில் புதிதாக ரோடு போடவேண்டும். பராசக்தி மாரியம்மன் கோவில் முதல் தெப்பம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலையோர வியாபாரிகள் கடைகள் போடக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர்களின் வாழ்வாரம் பாதிக்கப்படக்கூடாது, தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அதனால் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என கவுன்சிலர்கள் ஜெயக்குமார், வெங்கடேஷ், மைக்கேல்ராஜ் தெரிவித்தனர்.
அதனால் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.