ADDED : நவ 27, 2024 02:01 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் ராஜபாளையத்தை சேர்ந்த முகமது ஹசாலி 38, நூருல் பாத்திமா 28 ,தம்பதி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
ராஜபாளையம் சம்மந்தபுரத்தைச் சேர்ந்தவர் முகமது ஹசாலி. ஜவுளி வியாபாரி. இவரது மனைவி நூருல் பாத்திமா. இவர் கொடைக்கானலில் பள்ளி கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இத்தம்பதிக்கு 4 மற்றும் 6 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று காலை ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு டூ வீலரில் மனைவியுடன் முகமது ஹசாலி (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்றார். காலை 11:10 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவு பகுதியில் வரும் போது மதுரையில் இருந்து பாபநாசம் சென்ற அரசு பஸ் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தில் பலியாயினர். டூ வீலர் உருத்தெரியாமல் சேதமடைந்தது. டி.எஸ்.பி. ராஜா சம்பவ இடத்தை பார்வையிட்டார். வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.