UPDATED : ஜூலை 07, 2026 08:21 PM
ADDED : ஜூலை 07, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
நரிக்குடி:நரிக்குடி மினாக்குளத்தைச் சேர்ந்த போஸ் மகள் திலகவதி 38.
மும்பையில் குடும்பத்தினருடன் வசிக்கிறார். கணவர் முருகன், குழந்தைகளுடன் மினாக்குளத்தில் உள்ள சகோதரர் வீட்டிற்கு விடுமுறைக்கு வந்தார். மும்பைக்கு செல்ல சூட்கேசில் 5 அரை பவுன் நகைகள், மற்ற பொருட்களையும் அதில் வைத்து எடுத்துச் சென்றார். ஊரில் இருந்து காரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றனர். சூட்கேஸை கார் டாப்பில் கயிறு கட்டி வைத்திருந்தனர். ரயில் நிலையம் சென்று பார்த்த போது சூட்கேஸ் இல்லை. சென்ற வழியில் தேடிப் பார்த்த போது கிடைக்கவில்லை . நகைகளுடன் பொருட்களும் காணாமல் போனதால் சோகமடைந்தனர். அ. முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர் .
