UPDATED : ஜூலை 07, 2026 08:21 PM
ADDED : ஜூலை 07, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
காரியாபட்டி:காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன் தென் மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பாக, தலைவர் ராம் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமஜெயம், ரவிச்சந்திரன், தங்கம், ஜெயக்குமார், அர்ச்சுனன் , ராமச்சந்திரன், சேகர், முருகேசபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
