/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துணிப்பை பயன்படுத்த வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு
/
துணிப்பை பயன்படுத்த வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு
துணிப்பை பயன்படுத்த வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு
துணிப்பை பயன்படுத்த வேண்டும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேச்சு
ADDED : அக் 03, 2024 04:08 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: எதிர்கால மனித சமுதாய நலனுக்காக மக்கள் ஒவ்வொருவரும் நெகிழிப்பை பயன்பாட்டினை முழு அளவில் தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றங்களில் தூய்மை பணி முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.
இதனை துவக்கி வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேசுகையில், மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் நாடு முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், தெருக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும். எதிர்கால மனித சமுதாய நலனுக்காக நெகிழிப் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துணி பைகளை ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணியை துவக்கி வைத்து மரக்கன்றுகள் நடப்பட்டது.
விழாவில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி சுதாகர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி கவிதா, கூடுதல் சார்பு நீதிபதி ரத்னவேல் பாண்டியன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

