/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆவியூரில் ஜல்லிக்கட்டு ரத்து மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்
/
ஆவியூரில் ஜல்லிக்கட்டு ரத்து மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்
ஆவியூரில் ஜல்லிக்கட்டு ரத்து மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்
ஆவியூரில் ஜல்லிக்கட்டு ரத்து மாடுபிடி வீரர்கள் ஏமாற்றம்
ADDED : ஏப் 14, 2025 04:56 AM
காரியாபட்டி: காரியாபட்டி ஆவியூரில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு விதிமுறை மீறல்களால் ரத்து செய்யப்பட்டது. மாடுபிடி வீரர்கள் மாட்டு உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
காரியாபட்டி ஆவியூரில் கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு ஏப். 13ல் ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினர் ஏற்பாடு செய்தனர். 11ல் போட்டி நடத்த அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து போலி டோக்கன்களை தடுக்க, விழா குழுவினர் 50 ரூபாய் நோட்டில் உள்ள சீரியல் நம்பர்களை அச்சிட்டு ஆயிரம் டோக்கன்களை கொடுக்க ஏற்பாடு செய்து, வழங்கினர். 800 காளைகள், 400 மாடு பிடி வீரர்கள், 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், மருத்துவ குழுவினரும் ஈடுபட இருந்தனர்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், டோக்கன் வழங்குவதில் விழா குழுவினரிடையே முறைகேடு, விதி மீறல் நடந்ததாக பிரச்னை எழுந்தது. கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. விழா குழுவினரிடம் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., கனகராஜ், ஏ.எஸ்.பி., மதிவாணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விழா குழுவினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததாலும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சரிவர செய்யாததாலும் தற்காலிகமாக போட்டியை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டதால் மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.