/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோட்டில் ஓய்வு எடுக்கும் மாடுகள்: வேடிக்கை பார்க்கும் நகராட்சி
/
ரோட்டில் ஓய்வு எடுக்கும் மாடுகள்: வேடிக்கை பார்க்கும் நகராட்சி
ரோட்டில் ஓய்வு எடுக்கும் மாடுகள்: வேடிக்கை பார்க்கும் நகராட்சி
ரோட்டில் ஓய்வு எடுக்கும் மாடுகள்: வேடிக்கை பார்க்கும் நகராட்சி
ADDED : டிச 01, 2024 05:46 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரோடுகளில் மாடுகள் சுற்றி திரிவதால் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுவதை நகராட்சி நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.
அருப்புக்கோட்டை நகரில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு மாடுகளை ரோட்டிலும் தெருவிலும் மேய விடுவதால் அவைகள் சுற்றி திரிந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடைஞ்சல் தருகிறது.
மதுரை ரோட்டில் உள்ள டிவைடர் பகுதி, அண்ணாதுரை சிலை பகுதி, மெயின் பஜார், நாகலிங்க நகர், தெருக்களில் மாடுகளை உலாவ விடுகின்றனர்.
பாலையம்பட்டி மதுரை ரோட்டில் திருக்குமரன் நகர் அருகே நெடுஞ்சாலை துறையினர் சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.
அங்கு ரோடு போடும் பணியை பாதியில் நிறுத்தி வைத்துள்ளதால் அந்த பகுதியில் மாடுகள் கட்டி பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்கின்றனர். அந்தப் பகுதியில் பால் வியாபாரம் ஜோராக நடக்கிறது.
மாடுகளின் சாணம், குப்பைகள் ஆகியவற்றால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு புறநகர் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதேபோன்று, காந்திநகர் பகுதியில் ரோட்டில் மாடுகள் கூட்டம் கூட்டமாக செல்லுகிறது.
நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் நகரில் மாடுகள் சுற்றி திரிவதான கேள்வியை கேட்டால் மட்டும், சுகாதார பிரிவு அலுவலர்கள் ரோட்டில் மாடுகள் சுற்றி திரிந்தால் அபராதம் விதிக்கப்படும், மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என, ஆவேசமாக பதில் கூறுகின்றனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
நகரில் மாடுகள் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி திரிவதால் டூ வீலர்களில் செல்பவர்களுக்கு விபத்துக்கள் ஏற்படுகிறது.