/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகள்
/
ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகள்
ADDED : டிச 26, 2024 04:31 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுவதை நகராட்சியினர் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
அருப்புக்கோட்டை மதுரை ரோடு, திருச்சுழி ரோடு, பஜார் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.
பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளே சென்று படுத்து இளைப்பாறுகின்றன.
இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. ஏற்கனவே நகர்ப்புற ரோடுகள் குண்டும் குழியுமாக கிடங்காக உள்ளது.
இதில் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் மாடுகள் திடீரென்று ரோடு நடுவே நடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மதுரை ரோட்டில் அதிக அளவில் மாடுகள் ரோடுகளில் சுற்றி திரிகின்றன.
இந்த ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
மாடுகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. மாடுகளை பிடித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க நகராட்சி மெத்தனம் காட்டுகிறது. ரோடுகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.

