/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடங்கில் மின்னல் தாக்கி எரிந்து கருகிய பட்டாசுகள்
/
கிடங்கில் மின்னல் தாக்கி எரிந்து கருகிய பட்டாசுகள்
கிடங்கில் மின்னல் தாக்கி எரிந்து கருகிய பட்டாசுகள்
கிடங்கில் மின்னல் தாக்கி எரிந்து கருகிய பட்டாசுகள்
ADDED : அக் 13, 2024 05:47 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி முனீஸ் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 44. இவருக்கு ஒத்தபுளியில் பட்டாசு கிடங்கில் உள்ளது. இங்கு பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை சிவகாசி சுற்றுப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 7:00 மணி அளவில் பட்டாசு கிடங்கில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உள்ளிருந்த பட்டாசுகள் எரிந்து நாசமானது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
மதுரையை சேர்ந்த கனகு என்பவருக்கு சொந்தமாக ஏ.துலுக்கப்பட்டியில் பாலிபேக் நிறுவனம் உள்ளது. அதே நேரத்தில் இங்கும் மின்னல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர். இரு இடங்களிலும் ஆட்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.