
விருதுநகர் :விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் தொழிலதிபர் மதிபிரகாசம் நினைவு கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. 24 அணிகள் பங்கேற்றன.போட்டியில் முதல்பரிசு பெற்ற எவர்கிரீன் அணிக்கு குளோபல் குழும தலைவர் முரளிதரன் சுழற்கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கினார். 2ம் பரிசு லெவன்ஜர்ஸ் அணிக்கு சுழற்கோப்பை, ரொக்கப்பரிசும் 3ம் பரிசு பெற்ற ஹாட் மிர்ச்சி அணிக்கு சுழற் கோப்பையும், ரொக்க பரிசும் வழங்கபட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் தீபக், கனகரத்தினம், ஷீரடி சாய் சமஸ்தானம் குழுவினர் செய்திருந்தனர்.
ராம்கோ விளையாட்டு விழா
ராஜபாளையம் :
ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிஷன் தொழிலாளர்களுக்கான 44வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில் மேனேஜிங் டைரக்டர் ராம்குமார் ராஜா தலைமை வகித்தார்.
மேனேஜிங் டைரக்டர் நளினா ராமலட்சுமி பேசினார். இயக்குனர்கள் ஸ்ரீகண்டன் ராஜா, ராமசுப்பிரமணிய ராஜா முன்னிலை வகித்தனர். முதன்மை நிதி நிலை அதிகாரி விஜயகோபால் வரவேற்றார். தொழிலாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
நீண்ட காலம் பணிபுரிந்த, சிறந்த தொழிலாளர்கள், விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்தவர்கள் என 1160 தொழிலாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. டெக்ஸ்டைல் பிரிவு தலைவர் மோகன ரெங்கன், துணைத் தலைவர் சந்தோஷ், பொது மேலாளர் சுந்தர்ராஜ் நிர்வாக அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.