/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வறட்சிக்கு ஏற்ற மாற்று பயிராக டிராகன் பழ சாகுபடி
/
வறட்சிக்கு ஏற்ற மாற்று பயிராக டிராகன் பழ சாகுபடி
ADDED : செப் 19, 2024 04:27 AM

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டத்தில் வறட்சிக்கு ஏற்ற மாற்று பயிராக டிராகன் பழ சாகுபடி செய்ய வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் மழை பொழிவு குறைவான மாவட்டம். இங்கு மானாவாரி விவசாயம் தான் அதிகம் நடக்கிறது. வறட்சியான காலத்தில் விளையக்கூடிய பயிர் வகைகளை விவசாயம் செய்ய விவசாயிகள் மாறி வருகின்றனர்.
வறண்ட பகுதிகளில் நீர் பற்றாக்குறை உள்ள மண்ணில் விளையக்கூடியது டிராகன் புரூட். அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் டிராகன் புரூட் செயல் விளக்க திடல் அமைத்து வளர்த்து வருகின்றனர். டிராகன் பழ சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் இங்குள்ள செயல் விளக்க திடலை பார்வையிட்டு அதிகாரிகளிடம் தொழில் நுட்ப விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
மக்கள் தற்போது டிராகன் பழத்தை விரும்பி உண்கின்றனர். இதனால் சந்தையில் நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை, நரிக்குடி, திருச்சுழி பகுதியில் விவசாயிகள் டிராகன் பழ சாகுபடி செய்து வருகின்றனர்.