/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செடிகள் வளராத மண்ணில் குறுங்காடு வளர்ப்பு; காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் மக்கள் சாதனை
/
செடிகள் வளராத மண்ணில் குறுங்காடு வளர்ப்பு; காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் மக்கள் சாதனை
செடிகள் வளராத மண்ணில் குறுங்காடு வளர்ப்பு; காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் மக்கள் சாதனை
செடிகள் வளராத மண்ணில் குறுங்காடு வளர்ப்பு; காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் மக்கள் சாதனை
ADDED : செப் 23, 2024 05:58 AM

பூமியில் எத்தனையோ வகையான மண் வகைகள் உள்ளன. எல்லா மண் வகைகளிலும் எல்லா செடிகளும், மரக்கன்றுகளும் வளர்த்து விட முடியாது. மண் வகை, சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மரம், செடி, கொடிகள் வளர்கின்றன. வறட்சிப் பகுதியில் வளர்க்கக்கூடிய, வளரக்கக்கூடிய மரங்கள், செடிகள், கொடிகள் என உண்டு.
எந்த ஒரு மரம், செடி, கொடி வளராத மண் வகைகளும் உண்டு. அப்படிப்பட்ட மண் வகைகளில் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இட்டு, மரம், செடி, கொடிகளை வளர்க்க முடியும் என்பதற்கு அடையாளமாக காரியாபட்டி சத்திரம் புளியங்குளத்தில் எதற்குமே பயன்படாத பொட்டல் மண்ணில் குறுங்காடு வளர்த்துள்ளனர். இதற்காக மெனக்கெடுத்து தண்ணீர் ஊற்றி உரமிட்டு வளர்த்து 100 நாள் வேலை திட்ட மக்கள் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது அப்பகுதியில் உள்ள அரசு நிலங்கள் அனைத்திலும் மரக்கன்றுகளை நட்டு ஆடு, மாடுகள் கடித்து விடாத படி முள் தட்டி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். ரோட்டோரம் ஏராளமான வேம்புகளை நட்டனர். தற்போது வளர்ந்து பூஞ்சோலையாக உள்ளது. மரக்கன்றுகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதையும் மீறி குறுங்காடு உருவாக்க வேண்டும் எனபது சாதாரணமல்ல.
வைராக்கியத்தோடும், அர்ப்பணிப்புடன் செயல்பட்டு எதுவும் வளராத, வளர்க்க முடியாத மண்ணில் வேம்பு, குமிழ், அத்தி, புங்கன், மகாகனி, செரி, செண்பகம், அரளி, நந்தியாவட்டை, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகள், பூச்செடிகள் வளர்த்திருப்பது சாதனையே.
மரம், செடி, கொடி வளர்க்க மனது வேண்டும். எதுவும் வளராத மண்ணில் எப்படியாவது வளர்த்து விட முடியும் என்கிற நம்பிக்கை அதை விட பெரிய விஷயம். மாட்டுச் சாணம், குப்பைகள் உரமிட்டோம். அதற்கு பின் மரக்கன்றுகளை நட்டோம். கண்மாய், ஊருணியில் இருந்து தண்ணீரை எடுத்து ஊற்றினோம். நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாத சமயத்தில் நல்ல தண்ணீர் செல்லும் குழாய்களிலிருந்து எடுத்து வந்து ஊற்றினோம். தற்போது நன்கு வளர்ந்து பார்ப்பதற்கு அழகாக ரம்யமாக உள்ளது. இதனை உருவாக்கப்பட்ட பாடு பெரும் பாடு. தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
- ஆனந்தி, குடும்பத் தலைவி.
எதற்குமே உதவாத பொட்டல் மண். இதில் எப்படியாவது குறுங்காடு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து, அங்கிருந்த மண்ணை அப்புறப்படுத்தி வேறு இடத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மண் கொட்டப்பட்டு, குப்பை கலந்து மண்ணை பக்குவப்படுத்தினோம். மரக்கன்றுகள் வைத்து பின் நல்ல தண்ணீர் மட்டுமே ஊற்றினோம். இப்பகுதி முழுவதும் மரக்கன்றுகளை நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மண்ணை பக்குவப்படுத்தி கால்நடைகள் கடித்து விடாதபடி முள் தட்டி அமைத்து பாதுகாத்து வருகிறோம். எதிர்காலத்தில் இப்பகுதி அருமையான, அழகான பூஞ்சோலையாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
- கவிதாராம்பிரசாத், ஊராட்சி தலைவர்.