ADDED : ஜன 22, 2024 04:30 AM

விருதுநகர்: விருதுநகரில் கோட்டூர் பஸ் ஸ்டாண்ட் கூரைகள் சேதம் அடைந்துள்ளதால் பயணிகள் அவதியடைகின்றனர்.
விருதுநகரின் கோட்டூர் பகுதியில் முக்கிய வழிபாட்டு தலமாக இருப்பது கோட்டூர் குருசாமி கோயில். இங்கு வந்து செல்வதற்கு ஏதுவாகவும், அடுத்தடுத்து இருக்கன்குடி ரோடு வழியாக இருக்கன்குடி மாரியம்மன் கோயில் வந்து செல்வதற்கு ஏதுவாகவும், கோட்டூரில் மினி பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது.
தற்போது இதன் வழியாக குறைந்த பஸ்களே வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்டின் கூரைகள் காணாமல் போய் உள்ளன. இதனால், மழையடித்தாலும், வெயில் அடித்தாலும் பயணிகள் நனையும் சூழல் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் முன்பு போல் பரபரப்பாக இல்லை.
இருப்பினும் வந்து செல்லும் சில பஸ்களில் வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.