/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் முயல்களால் பயிர்கள் சேதம்
/
சாத்துாரில் முயல்களால் பயிர்கள் சேதம்
ADDED : பிப் 16, 2025 05:32 AM
சாத்துார் : சாத்துார் பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்துவிடும் காட்டு முயல்களால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சாத்துார் அருகே இ.முத்துலிங்கபுரம், சக்கம்மாள்புரம், வேப்பிலைப்பட்டி, ராமலிங்கபுரம், சந்தையூர், கோல் வார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் பாசி பயறு உளுந்து துவரம் பருப்பு எள் குருணை சிகப்பு சோளம்உள்ளிட்ட பயிர்களை விதைத்துள்ளனர்.
இவை நன்கு வளர்ந்து வரும் நிலையில்காட்டுப் பகுதியில் உள்ள முயல்கள் புகுந்து இரவு நேரத்தில் பயிர்களை கடித்து தின்று சேதம் செய்வதால் விவசாயிகள் இரவு முழுவதும் வயல்வெளியில் காவல் காக்கும் நிலை உள்ளது.
முயல்களை விரட்டுவதற்காக தங்கள் வயல் பகுதியை சுற்றிலும் சேலையால் வேலி அமைத்தும்,இரவு நேரத்தில் பரண் அமைத்து ரேடியோவை ஒலிபரப்பியும் விடிய விடிய காவல் காக்கும் நிலை உள்ளது.இதனால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு உடல்நல பாதிப்புக்கும் ஆளாகி தவித்து வருகின்றனர்.
வனத்துறையினர் காடுகளில் இருந்து படையெடுக்கும் முயல்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.