ADDED : ஜூன் 06, 2025 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே மாரனேரி கிழக்குத் தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
தற்போதும் பயன்பாட்டில் உள்ள இத்தொட்டியில் துாண்கள், மேற்பகுதி சேதமடைந்துள்ளது. தொட்டியை சுற்றிலும் குடியிருப்புகள், சுகாதார வளாகம் உள்ளது.
இதனால் எப்பொழுதுமே இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். குழந்தைகள் விபரீதம் அறியாமல் தொட்டியின் அருகிலேயே விளையாடுகின்றனர். தொட்டி இடிந்து விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.