/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்டுப் பன்றிகளால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை விவசாயிகள் வேதனை

ADDED : ஜன 25, 2024 04:53 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் விளைந்து அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரியாபட்டி பகுதியில் சென்ற ஆண்டு நல்ல மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பின. எஸ்.கடம்பன்குளம், சத்திரம் புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான ஏக்கரில் நெல் பயிரிட்டனர். நன்கு வளர்ந்து, விளைச்சல் காணும் நேரத்தில், பருவமழை தொடர்ந்து பெய்ததது. வயல்களில் தண்ணீர் தேங்கியதால் ஏராளமான ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
சிலர் மட்டுமே வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி நெற்பயிர்களை காப்பாற்றினர். மழை ஓய்ந்தபின் அறுவடை செய்ய முடிவு செய்திருந்தனர். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக நுழைந்து சேதப்படுத்தி விட்டன. அறுவடை செய்ய முடியாமல் போனதையடுத்து விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சுப்புலட்சுமி, விவசாயி, எஸ்.கடம்பன்குளம்: மழைக்கு தப்பித்து, விளைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது வேதனையை ஏற்படுத்துகிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே விவசாயிகள் விவசாயத்தை தொடர முடியும், என்றார்.