/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளபட்டி நாரணாபுரம் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
/
பள்ளபட்டி நாரணாபுரம் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
பள்ளபட்டி நாரணாபுரம் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
பள்ளபட்டி நாரணாபுரம் ரோடு சேதம்; வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 30, 2024 04:43 AM

சிவகாசி : சிவகாசி அருகே பள்ளப்பட்டியில் இருந்து 56 வீட்டு காலனி வழியாக நாரணாபுரம் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே பள்ளப்பட்டியிலிருந்து 56 வீட்டு காலனி வழியாக நாரணாபுரம் செல்லும் ரோடு சேதம் அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த ரோடு சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இப்பகுதியில் குடியிருப்புகள் மட்டுமல்லாது அச்சகங்கள் ஏராளமாக உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும். தவிர பள்ளி மாணவர்களும் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்நிலையில் ரோடு சேதத்தால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.