/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் ராமமூர்த்தி பாலத்தில் மழைநீர் வடிகுழாய்கள் சேதம்
/
விருதுநகர் ராமமூர்த்தி பாலத்தில் மழைநீர் வடிகுழாய்கள் சேதம்
விருதுநகர் ராமமூர்த்தி பாலத்தில் மழைநீர் வடிகுழாய்கள் சேதம்
விருதுநகர் ராமமூர்த்தி பாலத்தில் மழைநீர் வடிகுழாய்கள் சேதம்
ADDED : பிப் 18, 2025 04:37 AM
விருதுநகர்: விருதுநகர் ராமமூர்த்தி பாலத்தில் மழை நீர் வடிகுழாய்கள் சேதமாகி பல மாதங்களாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்யும் போது பாலத்தில் தேங்கும் தண்ணீர் சர்வீஸ் ரோட்டில் செல்பவர்கள் மீது வழிந்து ஓடுகிறது.
விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்பவர்களுக்கு ஏதுவாக ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இவ்வழியாக தற்போது தினமும் லாரி, பஸ், வேன், ஆட்டோ, கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. நகரின் முக்கியப்பகுதியாக இருப்பதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்த காணப்படுகிறது.
இந்த பாலத்தில் மழையின் போது தேங்கும் தண்ணீர் வடிந்து செல்ல ஏதுவாக பக்கவாட்டில் குழாய்கள் அமைக்கப்பட்டது. ஆனால் குழாய் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமாகியது. இதனால் மழைநீர் முறையாக வடிந்து செல்ல முடியாமல் சர்வீஸ் ரோட்டில் செல்பவர்கள் மீது விழுகிறது. இவ்வழியாக செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது வெயில் காலமாக இருப்பதால் ராமமூர்த்தி மேம்பாலத்தில் ஏற்பட்ட மழைநீர் வடிகுழாய் சேதத்தை காலம் தாழ்த்தாமல் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

