/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுக்கிரவார்பட்டியில் ரேஷன் கடை சேதம்
/
சுக்கிரவார்பட்டியில் ரேஷன் கடை சேதம்
ADDED : ஜன 30, 2024 07:15 AM

சிவகாசி : சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி ரேஷன் கடை சேதம் அடைந்திருப்பதால் மழைக் காலங்களில் தண்ணீர் உள்ளே இறங்கி பொருட்கள் வீணாகிறது.
சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டியில் ரேஷன் கடையில் 800 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ரேஷன் கடை இயங்கும் கட்டடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது சேதம் அடைந்துள்ளது. கட்டடத்தில் கூரையில் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது.
இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் உள்ளே இறங்கி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வீணாகிறது. அவ்வப்போது சிமெண்ட் பெயர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் பொருட்கள் வாங்க வரும் மக்கள் அச்சத்துடனே உள்ளனர். கடையின் பணியாளர்களும் வேறு வழியின்றி பணிபுரிகின்றனர். எனவே இங்கு ரேஷன் கடைக்கு என புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.