/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைபட்டி செல்லும் ரோடு சேதம்
/
இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைபட்டி செல்லும் ரோடு சேதம்
இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைபட்டி செல்லும் ரோடு சேதம்
இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைபட்டி செல்லும் ரோடு சேதம்
ADDED : பிப் 28, 2024 07:19 AM

சிவகாசி : சிவகாசி இரட்டை பாலத்தில் இருந்து கட்டளை பட்டி செல்லும் ரோடு மோசமாக சேதம் அடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
சிவகாசி இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைப் பட்டி செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ரோடு போட்ட சில ஆண்டுகளிலேயே பல இடங்களில் சேதம் அடைந்து விட்டது. இதில் அவ்வப்போது கிராவல் மண் அடித்தும், ஒட்டு போடும் பணியும் நடந்தது.
சிறுகுளம் கண்மாய் கரையை ஒட்டி ரோடு அமைந்துள்ளதால் எப்போதும் தண்ணீர் ஓட்டத்தினால் எத்தனை முறை சீரமைத்தாலும் ரோடு தாங்காமல் அடிக்கடி சேதம் அடைந்து விடுகின்றது. தவிர இதே ரோட்டில் பல இடங்களில் குழாய் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் ரோடு சிதைந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் செல்லும் பஸ்கள் இந்த ரோட்டினைத் தான் பயன்படுத்துகின்றன. டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இரு நாட்களுக்கு முன்பு டூவீலரில் வந்த ஒருவர் பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்தார். எனவே ரோட்டினை முழுமையாக தோண்டி புதிதாக தரமான ரோடு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

