/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த பால தடுப்புச் சுவர் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சேதமடைந்த பால தடுப்புச் சுவர் வாகன ஓட்டிகள் அச்சம்
சேதமடைந்த பால தடுப்புச் சுவர் வாகன ஓட்டிகள் அச்சம்
சேதமடைந்த பால தடுப்புச் சுவர் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மார் 17, 2024 12:18 AM

சிவகாசி: சிவகாசி - திருத்தங்கல் ரோட்டில் கிருதுமால் ஓடையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவர் சேதத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி முருகன் கோயிலில் இருந்து திருத்தங்கல் செல்லும் ரோட்டில் கிருதுமால் ஓடை உள்ளது. இந்த ஓடை வழியாகத்தான் நகருக்குள் அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன. இந்நிலையில் ஓடையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவர் சேதம் அடைந்துள்ளது.
பாலமும் குறுகியதாக இருப்பதால் வாகனங்கள் எளிதில் விலகிச் செல்லவும் முடியவில்லை.
வாகனங்கள் தெரியாமல் பாலத்தின் தடுப்புச் சுவரை ஒட்டிச் சென்றாலே கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது.
இதனால் எந்நேரமும் போக்குவரத்து நிறைந்து இருக்கும் இந்த பாலத்தில் சேதம் அடைந்த தடுப்புச் சுவரால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே உடனடியாக பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

