/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பூலாவூரணி ரோட்டில் சேதமான மின் கம்பங்கள்
/
பூலாவூரணி ரோட்டில் சேதமான மின் கம்பங்கள்
ADDED : நவ 26, 2024 04:44 AM

சிவகாசி: சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி ராஜதுரை 2 வது தெருவின் நுழைவுப் பகுதியில் ரோட்டோரத்தில் சேதம் அடைந்துள்ள மின்கம்பம், டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்களால் மக்கள அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே பூலாவூரணி ஊராட்சி ராஜதுரை 2 வது தெருவில் நுழைவுப் பகுதியில் விளாம்பட்டி செல்லும் ரோட்டோரத்தில் மின்கம்பம் உள்ளது. சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால் விளாம்பட்டி ரோடு முக்கிய மாற்றுப்பாறையாக உள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் இந்த ரோட்டில் தான் சென்று வருகின்றன.
இதனால் எப்பொழுதுமே இந்த ரோடு போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் ராஜதுரை நகர் 2 வது தெரு நுழைவுப் பகுதியில் ரோட்டின் ஓரத்தில் உள்ள இந்த மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இந்த சேதமான மின்கம்பத்தின் எதிர்புறம் ரோட்டோரத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதன் மின் கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது.
வாகனங்கள் செல்லும்போது மக்கள் நடமாடும் போது கீழே விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். எனவே இப்பகுதியில் உடனடியாக சேதம் அடைந்த மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.