ADDED : அக் 24, 2025 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் எத்தல் ஹார்வி ரோடு சேதமடைந்துள்ள நிலையில் அதனை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்துாரில் பெய்த கனமழை காரணமாக மெயின்ரோடு விலக்கில் எத்தனை ஹார்வி ரோடு மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக கரடு முரடாக உள்ளதால் காலை நேரத்தில் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பெற்றோர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
எனவே சேதம் அடைந்த ரோட்டை விரைந்து சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

