/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெம்பக்கோட்டையில் சேதமான மேல்நிலை குடிநீர் தொட்டி
/
வெம்பக்கோட்டையில் சேதமான மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : நவ 16, 2024 05:02 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்புறம் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள சேதம் அடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்புறம் 40 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இத்தொட்டி தற்போது முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தொட்டியின் துாண்கள், மேற்பகுதியில் சிமெண்ட் பெயர்ந்து கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. மேலும் தற்போதும் பயன்பாட்டில் உள்ள இத்தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கிறது.
மேலும் தொட்டியின் மேல் பகுதி விரிசலில் மரம் வளர்ந்துள்ளது. இம்மரத்தின் வேர்களால் தொட்டியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தொட்டியை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன.
மேலும் அருகில் உள்ள பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், தாலுகா அலுவலகத்திற்கு செல்பவர்கள் தொட்டியை கடந்து தான் செல்கின்றனர்.
மக்கள் நடமாடும் போது தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே உடனடியாக சேதம் அடைந்த தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.