/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மெயின் ரோட்டில் சேதமான வாறுகால்: தேங்கும் கழிவு நீர்
/
மெயின் ரோட்டில் சேதமான வாறுகால்: தேங்கும் கழிவு நீர்
மெயின் ரோட்டில் சேதமான வாறுகால்: தேங்கும் கழிவு நீர்
மெயின் ரோட்டில் சேதமான வாறுகால்: தேங்கும் கழிவு நீர்
ADDED : ஜன 19, 2024 04:31 AM

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் மெயின் ரோட்டில் சேதமடைந்த வாறுகாலால் மழைக் காலங்களில், கழிவு நீர் மழைநீர் வெளியேறி ரோட்டில் ஓடி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
சிவகாசி வேலாயுத ரஸ்தா விலக்கில் இருந்து திருத்தங்கல் செல்லும் மெயின் ரோட்டில் வாறுகால் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வாறுகால் வழியாக வெளியேறி கண்மாய்க்கு சென்று விடும். தற்போது இந்த வாறுகால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மேலும் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. மழைக்காலங்களில் மழை நீரும் வெளியேற வழி இன்றி கழிவுநீரோடு மெயின் ரோட்டில் ஓடுகின்றது. சிறிய மழை பெய்தாலும் முழங்கால் அளவிற்கு ரோட்டில் ஓடும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக இப்பகுதியில் வாறுகாலை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

