/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமடைந்த மின் கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சேதமடைந்த மின் கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : ஜன 13, 2025 06:09 AM

சிவகாசி : சிவகாசியில் இருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டில் சேதம் அடைந்துள்ள மின்கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசியில் இருந்து தட்டாவூரணி வழியாக விளாம்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் மின்கம்பங்கள் உள்ளன. இந்நிலையில் ரோட்டின் ஓரத்தில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மின் கம்பத்தில் சிமெண்ட் பெயர்ந்து அடியில் இருந்து உச்சி வரை துருப்பிடித்த கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது. ரோட்டோரத்தில் சேதம் அடைந்துள்ள மின்கம்பம் கீழே விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சேதம் அடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.