/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான மின் கம்பங்கள் தாழ்வான வயர்கள்
/
சேதமான மின் கம்பங்கள் தாழ்வான வயர்கள்
ADDED : டிச 08, 2024 05:15 AM

சிவகாசி : சிவகாசி அருகே புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள சேதமான மின் கம்பங்களாலும் தாழ்வாகச் செல்லும் மின் வயர்களாலும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே புதுக்கோட்டை, சித்தமநாயக்கன்பட்டி, கிருஷ்ணம நாயக்கன்பட்டி, குமிழங்குளம், செவலுார் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மக்காச்சோளம், நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இப்பகுதியில் விவசாய நிலங்களில் மின்சாரம் வினியோகத்திற்காக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சேதம் அடைந்தும், மின் வயர்கள் மிகவும் தாழ்வாகவும் செல்கின்றது. சேதமடைந்த மின் கம்பங்களில் தெரியாமல் உரசினாலே கீழே விழுந்து விடும் அபாயம் உள்ளது.
மேலும் தாழ்வாகச் செல்லும் மின் வயர்களில் உரசி விடும் அபாயமும் உள்ளது. தற்போது விவசாயம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைப்பதோடு தாழ்வாக செல்லும் மின் வயர்களை உயர்த்தி கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.