/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நாரணாபுரம் விலக்கில் சேதமான ரோடு
/
நாரணாபுரம் விலக்கில் சேதமான ரோடு
ADDED : ஜன 05, 2025 05:14 AM

சிவகாசி : சிவகாசி நாரணாபுரம் விலக்கு பஸ் ஸ்டாப் அருகே சென்டர் மீடியனை ஒட்டி சேதமடைந்துள்ள ரோடால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது.
சிவகாசி நாரணாபுரம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்து பைபாஸ் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறுகலாக இருந்த ரோட்டில் சென்டர் மீது அமைக்கப்பட்டதால் ரோடு மிகவும் குறுகிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு மட்டுமின்றி இப்பகுதி மெயின் பஜார் என்பதால் எப்பொழுதுமே இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்திருக்கும்.
பள்ளி கல்லுாரி மாணவர்கள் அனைவரும் இந்த ரோட்டில்தான் சென்று வருகின்றனர். இந்நிலையில் நாரணாபுரம் பஸ் ஸ்டாப் அருகே ரோடு சேதம் அடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. குறுகிய ரோடு சேதம் அடைந்து இருப்பதால் டூவீலர் உட்பட எந்த வாகனமும் எளிதில் செல்ல முடியவில்லை.
இப்பகுதியில் நான்கு ரோடு பிரிந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது. எனவே இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என வாகன போட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

