/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி தொழிற்பேட்டை வளாகத்தில் சேதமான ரோடுகள்
/
சிவகாசி தொழிற்பேட்டை வளாகத்தில் சேதமான ரோடுகள்
ADDED : டிச 28, 2024 05:37 AM

சிவகாசி : சிவகாசி தொழிற்பேட்டையில் சேதமான ரோடுகள், எரியாத தெருவிளக்குகளால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
சிவகாசி ரிசர்வ் லைன் அருகே 1962ல் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. துவக்கத்தில் தொழிற்பேட்டையில் 19 நிறுவனங்கள் இயங்கியது.
தற்போது 160 நிறுவனங்கள் இயங்குகின்றது. இதில் 5000 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
தினமும் 150க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள எட்டு குறுக்கு ரோடுகளும் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தற்போது அனைத்து ரோடுகளுமே சேதமாகி குண்டு குழியுமாக மாறிவிட்டதால் இதில் வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது.
மழைக்காலங்களில் ரோடுகள் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் இதில் வருகின்ற வாகனங்கள் சகதியில் பதிந்து விடுகின்றது.
இதனால் மழை பெய்தால் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இரு ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்பேட்டை வளாகத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் இருந்து கங்காகுளம் இணைப்பு ரோடு மட்டும் போடப்பட்டது. ஆனால் மற்ற சேதமடைந்த ரோடுகள் கண்டுகொள்ளப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் தொழிற்பேட்டை வளாகத்தில் சமீபத்தில் தெரு விளக்குகளும் எரியவில்லை.
எனவே தெரு விளக்குகளும் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

