/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேர்நாயக்கன்பட்டியில் தெருக்களில் சேதமான ரோடு
/
பேர்நாயக்கன்பட்டியில் தெருக்களில் சேதமான ரோடு
ADDED : டிச 22, 2024 07:05 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர்நாயக்கன்பட்டியில் பெரும்பான்மையான தெருக்களில் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இந்நிலையில் தற்போது அனைத்து தெருக்களிலுமே ரோடு சேதமடைந்துள்ளது. இதில் டூவீலர் வந்து செல்வதே சிரமமாக உள்ளது. சேதம் அடைந்த ரோடு குறுகியதாகவும் இருப்பதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் வருவதில் பெரிதும் சிரமப்படுகின்றது.
சேதமடைந்த ரோடு சீரமைப்பது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே பேர் நாயக்கன்பட்டியில் தெருக்களின் சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.