/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான கடைகள், திறக்கப்படாத கழிவறைகள் சாத்துார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
/
சேதமான கடைகள், திறக்கப்படாத கழிவறைகள் சாத்துார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
சேதமான கடைகள், திறக்கப்படாத கழிவறைகள் சாத்துார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
சேதமான கடைகள், திறக்கப்படாத கழிவறைகள் சாத்துார் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி
ADDED : நவ 02, 2024 06:30 AM

சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளின் கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வியாபாரிகளும், கழிப்பறை வசதி குறைவால் பயணிகளும் அவதிப்படுகின்றனர்.
சாத்துாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 42 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு 23 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதாலும் தொடர்ந்து பராமரிக்கப்படாததாலும் நகராட்சி கடைகளின் கூரைகள் விரிசல் விட்டு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. இதனால் கடை வியாபாரிகள் கடைக்குள் எந்த பொருளையும் வைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். திடீர் திடீரென கூறையில் இருந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுவதால் கடைகளுக்கு வெளியே பொருட்களை வைத்து வியாபாரம் செய்யும் நிலை உள்ளது.
பஸ் ஸ்டாண்டில் ஒரே ஒரு பொது கழிப்பறை மட்டுமே உள்ளது.வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் திறந்தவெளியை நாடுவதால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. பயணிகள் வசதிக்காக இங்கு புதியதாக கட்டப்பட்ட கழிப்பறை இன்று வரை திறக்கப்படவில்லை.
மேலும் மினரல் வாட்டர் பிளாண்ட் காட்சி பொருளாக உள்ளதால் பயணிகள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. பயணிகள் உட்கார போதுமான இருக்கை வசதி இல்லை. இதனால் பிளாட்பாரத்தில் உள்ள இரும்பு துாண்களில் உட்கார்ந்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
பிளாட்பாரத்தில் நிறுத்துவதற்காக பஸ்கள் பின்னால் வரும் போது இரும்பு துாண்களில் உட்கார்ந்து இருப்பவர்கள் மீது பஸ் மோதி விபத்து ஏற்படுகிறது.
இடிந்து விழும் கூரை
தாமஸ், வியாபாரி: பஸ் ஸ்டாண்டில் கடைகளின் கூரை சேதம் அடைந்து இருப்பதால் வியபாரம் செய்ய மிகுந்த அவதிப்படுகிறோம் .சிமெண்ட் காரை திடீரென
இடிந்து விழுகிறது. கடைக்குள் பொருட்களை வைத்தால் அதை சேதமாகின்றன. கடையை சீரமைத்து தர வேண்டும் என நகராட்சியில் பலமுறை மனு அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.பிளாட்பாரத்தில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கூரைகளும் ஆங்காங்கே விரிசல் விட்டு ஓழுகின்றன.
பயணிகள் அவதி
மாரிமுத்து, குடும்பத் தலைவர்: பிளாட்பாரத்தில் கூரை ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பலத்த மழை பெய்தால் முழங்கால் அளவிற்கு பஸ் ஸ்டாண்டில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலத்தில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
புதியதாக கழிப்பறை கட்டி திறக்கப்படவில்லை.மினரல் வாட்டர் பிளாண்ட்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இருக்கை வசதியின்றி பெண்கள் பெரியவர்கள் அவதிப்படுகின்றனர்.