ADDED : அக் 05, 2024 03:52 AM

சிவகாசி: சிவகாசி அருகே பேர் நாயக்கன்பட்டியில் இருந்து தாயில்பட்டி செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி அருகே பேர் நாயக்கன்பட்டியில் இருந்து தாயில்பட்டி 4 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த ரோடு போடப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
சித்துராஜபுரம், கொங்கலாபுரம், பேர் நாயக்கன்பட்டி பகுதி மக்கள் தாயில்பட்டி சாத்துார் செல்வதற்கு இந்த ரோட்டினை தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரோடு முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லயக்கற்றதாக மாறிவிட்டது.
இதனால் பேர் நாயக்கன்பட்டி பகுதி மக்கள் மண்குண்டாம் பட்டி வழியாக சாத்துாருக்கு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
மேலும் இந்த வழித்தடத்தில் ஏராளமான பட்டாசு கடைகள் பட்டாசு ஆலைகள் உள்ளன.
இங்கு வருகின்ற வாகனங்களும் பெரிதும் சிரமப்படுகின்றன.
எனது இங்கு உடனடியாக சேதமடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.