/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அச்சகங்களுக்கு மத்தியில் சேதமான டிரான்ஸ்பார்மர்
/
அச்சகங்களுக்கு மத்தியில் சேதமான டிரான்ஸ்பார்மர்
ADDED : ஆக 10, 2025 02:29 AM

சிவகாசி: சிவகாசி காமராஜர் ரோட்டில் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி ரயில்வே பீடர் ரோடு இதிலே உள்ள காமராஜர் ரோட்டில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இப்பகுதியில் உள்ள அச்சகங்கள், நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மரில் மின்கம்பங்கள் அடி முதல் உச்சி வரை சேதமடைந்து துருப்பிடித்த கம்பிகளால் தாங்கி நிற்கின்றது. பெரிய காற்று அடித்தாலோ, மழை பெய்தாலோ விழுந்து விடும் அபாயத்தில் உள்ளது.
இப்பகுதியில் அதிகமான அச்சகங்கள் உள்ளதால் கனரக வாகனங்கள் அதிகமாக வந்து செல்கின்றன. நான்கு ரோடு பிரியும் இடத்தில் டிரான்ஸ்பார்மர் இருப்பதால் வாகனங்கள் விலகும் போது எதிர்பாராமல் உரசி விட வாய்ப்புள்ளது. இதனால் டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் சேதமடைந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

