/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் சேதமான டிரான்ஸ்பார்மர் மின்கம்பங்கள் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : அக் 02, 2025 03:27 AM

சிவகாசி : சிவகாசி தலைமை தபால் நிலையம் அருகே ரோட்டோரத்தில் சேதம் அடைந்துள்ள டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்களால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி தலைமை தபால் நிலையம் அருகே ரோட்டோரத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலிருந்து அப்பகுதி குடியிருப்புகள், கடைகள், நிறுவனங்கள் பள்ளிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் டிரான்ஸ்பார்மரில் இரு மின் கம்பங்களுமே அடி முதல் உச்சி வரை முற்றிலும் சேதம் அடைந்து துருப்பிடித்த கம்பிகளால் தாங்கி நிற்கிறது.
பெரிய காற்று அடித்தாலோ மழை பெய்தாலோ விழுந்து விட வாய்ப்பு உள்ளது. எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும் இந்த ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது மின்கம்பங்கள் விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக டிரான்ஸ்பார்மரில் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.