/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கமலப்பட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி: அச்சத்தில் மக்கள்
/
செங்கமலப்பட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி: அச்சத்தில் மக்கள்
செங்கமலப்பட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி: அச்சத்தில் மக்கள்
செங்கமலப்பட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி: அச்சத்தில் மக்கள்
ADDED : நவ 22, 2024 03:52 AM

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ரோட்டோரத்தில் சேதம் அடைந்துஉள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே செங்கமலப் பட்டியில் ரோட்டோரத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டியின் மூலமாகத்தான் இப்பகுதி வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தொட்டி முற்றிலும் சேதம் அடைந்துஉள்ளது. பயன்பாட்டில் இல்லாத இத்தொட்டியின் அருகில் செல்வவிநாயகர், அம்மன் கோயில்கள், குடியிருப்புகள் உள்ளது.
இப்பகுதி சிறுவர்கள் விபரீதம் அறியாமல் தொட்டி அருகே விளையாடுகின்றனர். மக்கள் நடமாடும் போது தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும்.
எனவே சேதம் அடைந்த மேல்நிலைக் குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.