/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம்
/
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம்
ADDED : அக் 03, 2024 04:15 AM

திருச்சுழி: மகாளய அமாவாசை முன்னிட்டு திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
ஒவ்வொரு மாதம் அமாவாசை நாள் அன்று உள்ளூர் மட்டும் வெளியூர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருச்சுழி குண்டாற்றில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர். பின்னர் திருமேனி நாதர் கோயிலில் வழிபாடு செய்வர்.
நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்துவிட்டு தமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் கோயிலுக்கு சென்று மோட்ச தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.--