/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மனைவி உயிரிழப்பு : கணவருக்கு 10 ஆண்டு சிறை
/
மனைவி உயிரிழப்பு : கணவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : அக் 25, 2024 02:41 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர்மாவட்டம் வத்திராயிருப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பில் உடலுறவின்போது மனைவி உமாவின் மரணத்திற்கு காரணமான வழக்கில் கணவர் வனராஜூக்கு, 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வத்திராயிருப்பு தாலுகா கான்சாபுரம் அத்தி கோயில் மலைவாழ் மக்கள் காலனியைச் சேர்ந்தவர் வனராஜ் 50. இவரது மனைவி உமா 28. இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தங்கி காவலாளியாக பணியாற்றினர்.
இந்நிலையில் 2023 ஜன.13 இரவு தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் ரூமில் மனைவி உமாவுடன் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் வனராஜ் உடலுறவு கொண்டுள்ளார். இதில் உமா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
கூமாபட்டி போலீசார் வனராஜை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் வனராஜுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.