/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய நெடுஞ்சாலையில் மரண குழிகள்
/
தேசிய நெடுஞ்சாலையில் மரண குழிகள்
ADDED : செப் 02, 2025 11:42 PM

ராஜபாளையம்; ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் இருந்து மாரியம்மன் கோயில் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள சிறிய குழிகள் வாகன ஓட்டிகளை தடுமாற செய்து வருகின்றன. நெடுஞ்சாலை துறையினரின் மெத்தனத்தால் சாமானிய மக்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதியில் நடுவே திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை மதுரையிலிருந்து கேரள மாநிலத்திற்கு முக்கிய பாதையாகவும், குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளத்திற்கான வழியாகவும் அமைந்துள்ளதால் 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது.
கடந்த 20 நாட்களாக பஞ்சு மார்க்கெட்டில் இருந்து மாரியம்மன் கோயில் வரையிலான இரண்டு கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலையின் நடுவே 10ற்கும் அதிகமான சிறிய பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளை பாதித்து வருகின்றன. திடீரென தென்படும் இக்குழிகளால் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்திற்கு உள்ளாகி வருவதுடன் பின்னால் வருபவர்களும் மோதலுக்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து செல்வகுமார்: பஞ்சு மார்க்கெட், திரவுபதி அம்மன் கோயில், பழைய பஸ் ஸ்டாண்ட், மகப்பேறு மருத்துவமனை காந்தி சிலை ரவுண்டானா, பி.எஸ்.கே பார்க், சொக்கர் கோவில் அருகே என பள்ளங்கள் சிறிய குழிகளாக மாறி வாகன ஓட்டிகளை திடீர் தடுமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகின்றன. அமைச்சர்கள் இவ்வழியாக சென்றும் அதிகாரிகள் சரி செய்யாமல் வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.