ADDED : டிச 15, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி அருகே குருந்தங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துவின் தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்தது விட்டது.
திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அங்கு நீந்தி கொண்டிருந்த மானை வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் வனக்காப்பாளர் ராஜேந்திர பிரபுவிடம் மானை ஒப்படைத்தனர்.