/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாட்சியாபுரம் மேம்பால பணி துவங்குவதில் தாமதம்: ரயில்வே கிராசிங் வழியாக வாகனங்கள் இயக்கம்

ADDED : ஜூலை 22, 2024 05:38 PM
சிவகாசி: சிவகாசி சட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி தொடங்குவது தாமதமாவதால், ரயில்வே கிராசிங் வழியாக வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் வெளியிடப்பட்டதால், வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 19, 20 ம் தேதிகளில் ரயில்வே கிராசிங் மூடப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்வதற்கு சோதனை ஓட்டம் நடந்தது. ஜூலை 23 ல் பூமி பூஜை உடன் மேம்பால பணிகள் துவங்க இருந்ததால் ரயில்வே கிராசிங் வழியாக டூவீலர்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மேம்பாலம் பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை ரத்து செய்யப்பட்டு, மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ரயில்வே கிராசிங் வழியாகவே செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.