/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைப்பதில் தாமதம்! காத்திருந்து தவிக்கும் கிராமப்புற மக்கள்
/
ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைப்பதில் தாமதம்! காத்திருந்து தவிக்கும் கிராமப்புற மக்கள்
ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைப்பதில் தாமதம்! காத்திருந்து தவிக்கும் கிராமப்புற மக்கள்
ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைப்பதில் தாமதம்! காத்திருந்து தவிக்கும் கிராமப்புற மக்கள்
ADDED : பிப் 23, 2024 05:23 AM

விருதுநகர் மாவட்டம் வழியாக மதுரை - திருநெல்வேலி, மதுரை - செங்கோட்டை வழித்தடங்கள் செல்கின்றன. இவற்றை ஒட்டி நிறைய கிராமங்கள் உள்ளன. அக்கிராமங்களை நகரங்களுக்கு இணைக்கும் ஒரே ஒரு பாதையாக உள்ள வழித்தடத்தில் தான் இந்த ரயில்வே தண்டவாளங்களும் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அப்பகுதி மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப பல இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் சென்று வர ஏதுவாக உதவிகரமாக இருப்பதுடன், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் சென்று வரவும் அத்தியாவசியமாக உள்ளது. இந்நிலையில் இன்னும் பல பகுதிகளில் சிமென்ட் பிளாக்குகள் போட்டு வைக்கப்பட்டன. ஆனால் தற்போது வரை பணிகள் துவங்கப்படவில்லை.
தற்போது கிராமங்களில் அதிகரித்து வரும் பொருளாதார சூழலால் கிராமத்தினர் பலர் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுக்கின்றனர். மக்கள் தொகை அதிகரிப்பும் ஒரு பக்கம் இருந்து வருவதால் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படாத கிராமங்களில் அவை தற்போது அதிதீவிர தேவையாக உள்ளது.
மேலும் சிறப்பு நிலை ஊராட்சிகள் அளவிற்கு பல கிராமங்கள் வளர்ந்து விட்டன. இதனாலும் தேவைக்காக அடிக்கடி வாகனங்கள் வந்து செல்கின்றன. சிக்னல் போட்டால் கிராஸிங் கேட் அடைத்து விட்டால் 10 முதல் 15 நிமிடங்கள் வரையாக காத்திருக்கும் சூழல் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
விருதுநகர் அருகே ஆவல்சூரன்பட்டி, சத்திரரெட்டியபட்டி, பட்டம்புதுார், துலுக்கப்பட்டி என பல இடங்களில் ரயில்வே சுரங்கப்பாலங்கள் முக்கிய தேவையாக உள்ளது. சாத்துார் தாலுகாவிலும், இதே போல் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையத்திலும் ஊரகப்பகுதிகளில் சுரங்கப்பாலங்கள் தேவையாக உள்ளது.
பல இடங்களில் சிமென்ட் பிளாக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கிராமத்தினர் கடும் சிரமத்தினை சந்தித்து வருகின்றனர்.