/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊராட்சி தனி அலுவலருக்கு செக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் தர தாமதம்
/
ஊராட்சி தனி அலுவலருக்கு செக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் தர தாமதம்
ஊராட்சி தனி அலுவலருக்கு செக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் தர தாமதம்
ஊராட்சி தனி அலுவலருக்கு செக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் தர தாமதம்
ADDED : ஜன 25, 2025 02:12 AM
விருதுநகர்,:தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவி காலம் நிறைவடைந்து இன்றுடன் 20 நாட்கள் ஆகிறது. பதவிக்காலம் முடிந்ததும் தனி அலுவலர்களை நியமித்து அரசு உத்தரவிட்ட நிலையில், அவர்களுக்கு தற்போது வரை செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் அளிக்காததால் சிறு பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 டிச.,ல் நடந்தது. இதன் பதவிக்காலம் 2025 ஜன., 5ல் முடிந்தது.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகள் காலாவதியாகின. இந்நிலையில் ஊராட்சிகளுக்கு அந்தந்த ஒன்றியங்களின் பி.டி.ஓ.,க்களை சிறப்பு அலுவலர்களாகவும், மாவட்ட ஊராட்சிகளுக்கு உதவி இயக்குனர்களை நியமனம் செய்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இவர்களுக்கான செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் தர தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் குடிநீர் குழாய், தெருவிளக்கு மாற்றவது போன்ற சிறு சிறு அடிப்படை வசதி கூட செய்ய முடியாமல் அலுவலர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஜன., 20க்குள் மாற்றப்பட்டு விடும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை தரப்படவில்லை. அதாவது செலவின இணையத்தில் தனி அலுவலர்களுக்கு ஒரு முறை கடவுச்சொல் மூலம் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது.
நிதி செலவிடுவதில் ஊராட்சி தலைவர் அனுமதிப்பவராகவும், ஊராட்சி செயலாளர் உருவாக்குபவராகவும், துணை தலைவர் சரிபார்ப்பவராகவும் பதவிக்காலத்தில் இருந்தனர்.
இதில் அனுமதிக்கும் இடத்தில் பி.டி.ஓ.,க்களை மாற்ற வேண்டியுள்ளது.
அவ்வாறு செய்தால் மட்டுமே நிதி அனுமதித்து பணிகளை செய்ய முடியும். தற்போது வரை அதை செய்யவில்லை.
இதனால் ஊராட்சிகளில் எந்த பணிகளையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

