/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பணிகளில் தொய்வு ---துாசியால் மக்கள் அவதி
/
குழாய் பணிகளில் தொய்வு ---துாசியால் மக்கள் அவதி
ADDED : செப் 22, 2025 03:12 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சி குடிநீர் வழங்கல் துறை சார்பாக 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டக் குழாய்களின் பள்ளங்களை சீரமைக்கும் பணி தாமதத்தால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் 2023 மார்ச் மாதம் தாம்பரம், திருச்சி, திருநெல்வேலி, காரைக்குடி ராஜபாளையம் உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை அமைச்சர் நேரு வெளியிட்டார்.
இதன் முதல் கட்டமாக ராஜபாளையத்தில் மொத்தம் உள்ள 42ல் 7 வார்டுகளில் முதல் கட்டமாக பணிகள் நடந்து வருகிறது. இதன்படி அய்யனார் கோயில் ஆறாவது மைல் நீர் தேக்கம் முதல் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு பஜனை கோயில் மேல்நிலை தேக்க தொட்டி வரை குழாய் பறிக்கும் பணி முடிந்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தோண்டப்பட்ட பள்ளங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தொடங்கியது. ஜல்லி கற்கள் பரப்பிய நிலையில் விட்டுள்ளதால் கனரக உள்ளிட்ட வாகனங்கள் சென்று துாசி பரவியும் சாலையில் சிதறி போக்குவரத்து இடையூறுடன் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தொடங்கிய பணிகளை வேகமாக முடிக்க அறிவுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.