/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களுக்கு அலுவலக இடமாற்றம் தாமதம் தண்ணீர் வசதியின்றி பெண் அரசு ஊழியர்கள் தவிப்பு

ADDED : ஏப் 04, 2025 06:17 AM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களுக்கு அலுவலக இடமாற்றம் தாமதமாகி வருகிறது. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் பிரச்னை உள்ளது. இதனால் பெண் ஊழியர்கள் விழிபிதுங்குகின்றனர்.
விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலகம் திறந்து 5மாதங்கள் ஆகி விட்டது.பெரும்பாலான அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் காலியாகி கொண்டிருக்கும் பழைய கலெக்டர் அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறைக்கு ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இப்போது வரை அதற்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் உள்ளது.
பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் தாமதமாக அமைக்கப்பட்டது தான் கலெக்டர் அலுவலகத்தில் அலுவலகங்கள் இடம் மாற தாமதமானது.
இந்நிலையில் தற்போது ரூ.77.12 கோடியில் ஆறு தளங்களுடன் அமைந்த விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நிறைய அலுவலகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டன. பழைய கலெக்டர் அலுவலகத்தில் தரைத்தளம், முதல் தளம் காலியாக உள்ளன. இந்நிலையில் பாழடைந்து சேதமடையும் நிலையில் உள்ள பள்ளிக்கல்வித்துறையை பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தற்போது பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில்தண்ணீர் பிரச்னை உள்ளது. இதனால் கழிப்பறையை பயன்படுத்த முடிவதில்லை. அதே போல் சாப்பிட்ட பின் கை கழுவ முடியாத சூழல் உள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விரைந்து பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை அலுவலகங்களை பழைய கலெக்டர் அலுவலகத்திற்கோ, புதிய கலெக்டர் அலுவலகத்திற்கோ இடமாற்றம் செய்ய வேண்டும்.