/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற தாமதம்
/
ஆபத்தான மின்கம்பங்களை மாற்ற தாமதம்
ADDED : செப் 01, 2025 02:07 AM

நரிக்குடி: ஆபத்தான மின் கம்பங்களை மாற்ற புதிய மின் கம்பங்கள் இறக்கி வைக்கப்பட்டும் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நரிக்குடி கணையமறித்தான் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்தது. மின்வாரியத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற 4 மாதங்களுக்கு முன் புதிய மின் கம்பங்கள் அப்பகுதியில் இறக்கி வைக்கப் பட்டன.
இதுவரை மாற்றப்படவில்லை. விபத்திற்கு முன் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதே போல் காரியாபட்டி, அச்சம்பட்டி, நேதாஜி நகர் பகுதியில் 3 மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து எப்போது உடைந்து விழுமோ என்கிற நிலையில் இருந்து வருகிறது. அப்பகுதியில் செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பழைய மின் கம்பங்களை அகற்ற, புதிய மின்கம்பங்களை நட இறக்கி வைத்து 5 மாதமாகியும் இதுவரை மாற்றப்படவில்லை.
வீதியில் இறக்கி வைத்துள்ளதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. விபத்து ஏற்படுகிறது. கிடப்பில் போடப்பட்ட புதிய மின் கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.