தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு பதில் தர தாமதம்: குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்காததால் தவிக்கும் சூழல்

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு பதில் தர தாமதம்: குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்காததால் தவிக்கும் சூழல்

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு பதில் தர தாமதம்: குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்காததால் தவிக்கும் சூழல்


UPDATED : அக் 12, 2026 12:58 AM

ADDED : அக் 11, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 12:58 AM ADDED : அக் 11, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரியாபட்டி: மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு பதில் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதும், தவறுகளுடன் பதில் தருவது, தாமதப்படுத்துவது என குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் தராமல் விண்ணப்பதாரர்களை தவிக்க விடுகின்றனர். குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அரசு துறைகளில், நடந்த வளர்ச்சி திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் தலைவர்களின் விவரங்கள், நடந்த சம்பவங்கள் என தேவைப்படும் விவரங்களை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கொடுக்கின்றனர். விண்ணப்பித்த நாட்களில் இருந்து 30 நாட்களுக்குள் தகவல்களை தர வேண்டும்.

துவக்கத்தில் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் அனுப்பி மக்கள் எளிதில் அறியும் வாய்ப்பை வழங்கினர் . காலப்போக்கில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் தகவல் தருவது கிடையாது. ஒரு சில துறை அதிகாரிகள் அலட்சிய போக்குடன் செயல்படுகின்றனர். சில துறைகளில் 30 நாட்களைக் கடந்தும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

பல திட்டப்பணிகள் முறையாக செய்யாமல், நிதி மட்டும் எடுக்கப்பட்டு இருப்பது குறித்து விவரம் கேட்டால் அதற்கு முறையான பதில் அளிப்பதில் காலதாமதப்படுத்துகின்றனர் . சில நேரங்களில் தவறுகளுடன் தருகின்றனர். இதனால் விண்ணப்பதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அறிய தொடர்பு கொண்டால் விண்ணப்பதாரர்களை சிலர் அவமரியாதையாக நடத்துகின்றனர். அது மட்டுமல்ல உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பித்து தகவல் கோரும் நபர்களின் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்யாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகின்றனர். இதே நிலைமைதான் வருவாய்த்துறை, போக்குவரத்து துறை, போலீஸ் துறைகளிலும் உள்ளன.

இச்சட்டத்தின் நோக்கமே தவறுகள் நடக்கும் போக்கை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் சிதைக்கப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒன்று இருக்கிறதா என்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கி வருகின்றனர். அத்தகைய போக்கை தடுக்க ஒவ்வொரு அரசு துறைகளிலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்படும் மனுக்களின் நிலை குறித்தும், பதிலளிக்கப்பட்டதா அல்லது காலதாமதமாக வழங்கப்படுகிறதா என்பதை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். அலட்சியம் செய்பவர்கள் மீது மேல் முறையீடு செய்தால் என்ன வகையான சட்டதிட்டங்களின் கீழ் பாதிக்கப்படுவர் என்கிற விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். காலதாமதப்படுத்தி, அலட்சிய போக்குடன் செயல்படாமல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மனுக்களுக்கு உடனடியாக பதில் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us