தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/செங்கோட்டை- – மயிலாடுதுறை ரயிலில் தேவை முன்பதிவு பெட்டிகள்

செங்கோட்டை- – மயிலாடுதுறை ரயிலில் தேவை முன்பதிவு பெட்டிகள்

செங்கோட்டை- – மயிலாடுதுறை ரயிலில் தேவை முன்பதிவு பெட்டிகள்


UPDATED : அக் 11, 2026 06:09 PM

ADDED : அக் 11, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 06:09 PM ADDED : அக் 11, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு இயங்கும் ரயிலில் 3 செகண்ட் சிட்டிங் பெட்டிகள் இணைக்கவும், இரவு நேர சேவையாக மறுமார்க்கத்தில்

கூடுதல் டிரிப் இயக்கவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 7:00 மணிக்கு புறப்படும் ரயில், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக மதியம் 3:40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து தினமும் மதியம் 12:35 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8:55 மணிக்கு செங்கோட்டை வந்தடைகிறது.

இவ்விரு ரயில்களிலும் நீண்ட துாரம் பயணிப்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். இதை தவிர்க்க ரயிலில் முன்பதிவு வசதியுடன் 3 செகன்ட் சிட்டிங் பெட்டிகள் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மேலும் இரவு 8:55 மணிக்கு செங்கோட்டை வரும் ரயில், மறுமார்க்கத்தில் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:00 மணிக்குள் மயிலாடுதுறை சென்றடையும் வகையிலும், மாலை 3:40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும் ரயில், மாலை 5:00 மணிக்கு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 2:00 மணிக்கு செங்கோட்டை வரும் வகையிலும் கூடுதல் சேவையாக இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us