/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்வீஸ் ரோடு பணி தாமதம் நத்தம்பட்டி மக்கள் அவதி
/
சர்வீஸ் ரோடு பணி தாமதம் நத்தம்பட்டி மக்கள் அவதி
ADDED : ஏப் 14, 2025 04:57 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வரை 71.6 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டது. பல இடங்களில் பாலங்கள், ஸ்ரீவில்லிபுத்துார், எஸ்.ராமலிங்கபுரம் பகுதியில் ரயில்வே பாலங்கள் அமைக்கும் பணிகள் மட்டுமே முடிவடையாமல் உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலையில் இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெறாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் இவ்வழியாகச் செல்லும் அனைத்து பஸ்களும் பாலத்தில் மக்களை இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் பகல், இரவு நேரங்களில் ரோட்டை கடப்பதிலும், வெயில், மழை நேரத்தில் எவ்வித நிழற்குடையும் இல்லாமல் ரோட்டில் நின்று தான் மக்கள் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் விபத்து அபாயமும், சிரமமும் ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க சர்வீஸ் ரோடு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நத்தம்பட்டி, சுற்றுப்புற கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

